முக்கியச் செய்திகள் தமிழகம்

நமீபியாவில் இருந்து இந்தியா வந்த சிறுத்தைகள்; பிரதமர் திறந்துவிட்டார்

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார்.

குனோ தேசிய பூங்காவில் மூன்று சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் மோடி, ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, கேமரா மூலம் அவைகளை புகைப்படமும் எடுத்தார். பிறகு, அவர் அடைப்பு எண் ஒன்றிலிருந்து இரண்டு சிறுத்தைகளை விடுவித்தார். அதன் பிறகு, சுமார் 70 மீட்டர் தொலைவில், இரண்டாவது அடைப்பிலிருந்த மற்றொரு சிறுத்தையயும் அவர் விடுவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க அனைத்து சிறுத்தைகளிலும் ரேடியோ காலர்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுத்தையின் பின்னாலும் ஒரு கண்காணிப்புக் குழு உள்ளது. அது 24 மணி நேரமும் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்து கொண்டே இருக்கும்.

கடந்த காலத்தில் இந்தியா ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆனால் 1952 ஆம் ஆண்டு சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கண்டங்களுக்கு இடையேயான இடமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் தேசிய பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவில் அதற்கு தேவைப்படும் உணவு கிடைப்பதால் குனோ பூங்கா ஒரு வீடாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சிறுத்தைகள் தன் புதிய வாழ்விடத்தை அமைத்து கொள்ளப் போராடக்கூடும் என்றும், இதனால் சிறுத்தைகளுடன் மோதல்கள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தை அறிமுகம் திட்டம் 2009 இல் உருவாக்கப்பட்டது. KNPல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் கொரோனா தொற்றால் தாமதமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

G SaravanaKumar

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

தமிழ் கடல் நெல்லை கண்ணன் காலமானார்; நாளை பிற்பகலில் இறுதிச்சடங்கு

Arivazhagan Chinnasamy