நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
லியோ படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாட்டில் 900 திரைகளில் வெளியிட லியோ படத்தின் வெளியீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட திரையரங்கிலும் வெளியாகவுள்ளது. மேலும் அதுமட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.