தெலுங்கில் மண்டேலா ரீமேக் திரைப்படம் அக்டோபர் 27-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் மடோன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த இயக்குநர் பிரிவுகளில் அஸ்வின் மடோன் தேசிய விருதுகளைப் பெற்றார்.
தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ‘மார்டின் லூதர் கிங்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது. இதில், யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் சம்பூர்ணேஷ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பூஜா கொல்லுரு இதனை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் வருகிற அக்.27 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







