29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

இன்று வெளியாகும் லியோ டிரைலர் – சம்பவம் உறுதி என அப்டேட் கொடுத்த அனிருத்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் நிலையில், சம்பவம் உறுதி என இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்த நாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

லியோ திரைப்படத்திற்கான  சென்சார் நேற்று நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் எக்ஸ் தளத்தில், “சம்பவம் உறுதி” என லியோ டிரைலர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் வசன எழுத்தாளரான இயக்குநர் தீரஜ் வைத்தி, ‘லியோ டிரைலரைப் பார்த்தேன். உங்கள் தாவம்பட்டை தரையில் இருக்கப்போகிறது’ எனக் கூறியிருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லியோ டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading