சட்டப்பேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது.

சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார் அவை பின்வருமாறு:-

  • புயலையும், வடகிழக்கு பருவ மழையையும் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது.
  • இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
  • தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தொழிற்துறையின் தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் உள்ளது.
  • பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
  • 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு வெற்றிக்கரமாக நடத்தி முடித்து உள்ளது.
  • புத்தொழில் திட்டத்தில் ரூ30 கோடியை பட்டியிலன மக்களுக்கு ஒதுக்கி இருப்பது மிகச்சிறந்த முன்னெடுப்பு.
  • காலை உணவு திட்டத்தால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
  • தமிழகத்தின் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோயகத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும்.
  • 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும்.
  • கீழடி அருங்காட்சியகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 42,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
  • புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என அரசு கருதுகிறது.
  • கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
  • மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
  • தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • 50 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
  • போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட அரசு உறுதி.
  • 2 லட்சம் தன்னார்வலர்களின் உதவியுடன் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  •  இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு தடுத்துள்ளது.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி மக்களை சென்றடைந்துள்ளது.
  • வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என தனது உரையை நிறைவு செய்தார் அளுநர் ஆர்.என். ரவி.

ஆர்.என். ரவி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.