சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் – மநீம வலியுறுத்தல்

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாள் மேகதாது அணைக்கு எதிரான திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை ஆணைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரலை செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆளுநர் உரை மீது விவாதங்கள் நேரலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் A.G.மெளரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.

ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது.

ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம். வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.