முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பழம்பெரும் நடிகர் கே.விஸ்வநாத் மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் தனது 92வது வயதில்  காலமானார். அவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

92 வயதான கே.விஸ்வநாத் ஆந்திர மாநிலத்தில் 1930 ல் பிறந்தார். தனது 27-வது வயதில் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் சவுண்ட் இன்ஜினீயராகத் திரைப் பயணத்தைத் தொடங்கிய அவர் சில தெலுங்குப் படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிவிட்டு அதன் பின்னர்  திரைப்பட இயக்கம் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாக, பிரபல தெலுங்கு இயக்குநர் அதுர்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார். பிறகு, ரம்னோத், கே.பாலசந்தர், பாபு எனப் பல இயக்குநர்களிடம் சினிமாவைக் கற்றார்.

1965-ம் ஆண்டு ‘ஆத்மகெளரவம்’ என்ற நாவலை அதே பெயரில் தெலுங்குத் திரைப்படமாக எடுத்து, இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே சிறந்த திரைப்படத்துக்கான நந்தி விருதைப் பெற்றது. இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி 2016ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அவருக்கு   வழங்கப்பட்டது.

விஸ்வநாத் இயக்கி கமல்ஹாசன் நடித்த ‘சாகர சங்கமம்’ தெலுங்குப் படம், ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கமல்ஹாசன்-இளையராஜா கூட்டணியில் இவர் இயக்கிய ‘சலங்கை ஒலி’ திரைப்படம், கமல்ஹாசனின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என தனது தனித்துவ படங்கள் மூலம் தடம் பதித்தவர் விஸ்வநாத் 53 படங்களை இயக்கியுள்ளார். அதேபோல  தமிழில் முகவரி, உத்தம வில்லன், யாரடி நீ மோகினி, குருதிப்புனல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. மேலும் இவர் 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது ஆகியவைகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

92 வயதான கே.விஸ்வநாத்  வயது மூப்பு காரணமாக  கடந்த சில வருடங்களாக  சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத் இல்லத்தில கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவு காலமானார்.
அவரது மறைவுக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட  திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!

Web Editor

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்

Halley Karthik

மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!

G SaravanaKumar