முக்கியச் செய்திகள் தமிழகம்

2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது

2 கட்டங்களாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு  இன்று முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என  தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான கணினி வழித் தேர்வு (பிப்ரவரி 3 ந் தேதி) இன்று முதல் பிப்ரவரி 14 ந் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை வாரியத்திலிருந்து சிசிடிவி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையும் , இரண்டாவது கட்டத்தில் பத்தாம் தேதி வரை 14ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் கணினி வசதியுடன் கூடிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு 4,லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர் இவர்களில் 4லட்சத்து ஆயிரத்து 856 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

5313 மாற்றுத்திறனாளிகளும், கண் விழி பார்வை குறைவுடையோர் 1218 பேரும் ,2662 சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதும் விண்ணப்பித்துள்ளனர். கணினி விழி தேர்வு எழுத வருவதற்கான மையங்கள் அதிகளவாகச் சேலத்தில் 14, திருச்சிராப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலா 13 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 240 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத 1 லட்சத்து 80 ஆயிரத்து 616 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் தலா ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்கத் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .தேர்வின் போது நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து சிசிடிவி மூலம் இணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்குக் காலையில் நடைபெறும் தேர்வினை எழுத 7.30 முப்பது மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வினை எழுத 12 30 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

தேர்வு மையங்களுக்குள் மொபைல், வாட்ச் பெண்கள் காதுகளில் நகைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுபவர்கள். மேலும் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வினை எழுதுவதற்கும் தடை விதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14 ந் தேதி முதல் ஏப்ரல் 26 ந் தேதி வரையில் பெறப்பட்டது. தற்பொழுது பிப்ரவரி 3 ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14 ந் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-2 ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  இணையதளத்தில் தேவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவே இறுதியானது தேர்வை எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யவும் ஒத்தி வைக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கருத்து கணிப்புகள் மக்களை திசை திருப்ப திமுக நிகழ்த்தும் மாயாஜாலம் – டிடிவி தினகரன்

G SaravanaKumar

காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரிய வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Saravana

கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy