நடிகர் ரஜினியுடன் லெஜெண்ட் சரவணன் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் லெஜெண்ட் சரவணன், ரஜிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.   தொழில் அதிபர் சரவணன் – ஊர்வசி ரவுத்தலா நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ்…

நடிகர் லெஜெண்ட் சரவணன், ரஜிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

தொழில் அதிபர் சரவணன் – ஊர்வசி ரவுத்தலா நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. உலகம் முழுவதும் சுமார் 2500 ஆயிரம் திரையரங்குகளில் தி லெஜெண்ட் திரைப்படம் திரையிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய மசாலா படமாக தி லெஜெண்டை படக்குழுவினர் உருவாக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன. லெஜெண்ட் படம் வெளியான முதல் நாட்களில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லெஜெண்ட் சரவணன் படத்தை வெற்றிகரமாக மாற்றிய ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

 

அந்த புகைப்படத்தில் லெஜெண்ட் சரவணனும், நடிகர் ரஜினியும் சிரித்து பேசுவது போன்று உள்ளது. இந்த படத்தை பதிவிட்ட அவர், சூப்பர் ஸ்டாருடன் தருணங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.