“ஊழலின் இரட்டை கோபுரங்கள்”-அரவிந்த் கெஜ்ரிவால்,மணிஷ் சிசோடியா மீது பாஜக சாடல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் ஊழலின் இரட்டைக் கோபுரங்கள் என பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனேவாலா விமர்சித்துள்ளார். சட்டவிரோதமாக மதுபான பார்களுக்கான உரிமங்களை வழங்கி பல கோடி…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் ஊழலின் இரட்டைக் கோபுரங்கள் என பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனேவாலா விமர்சித்துள்ளார்.

சட்டவிரோதமாக மதுபான பார்களுக்கான உரிமங்களை வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் டெல்லி மாநில உயர் அதிகாரிகள் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அவரோடு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இந்த ஊழல் புகார் விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவர்கள் மீதும் அக்கட்சி மீதும் பல்வேறு விமர்சனங்களை பாஜகவினர் தொடுத்து வருகின்றனர். டிவிட்டர் பக்கத்தில் தமது கருத்தை பதிவிட்டுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனேவாலா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் ஊழலின் இரட்டை கோபுரங்கள் என விமர்சித்தார். மதுபான உரிமம் முறைகேடு விவகாரத்தில் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள ஷேஷாத் பூனேவாலா, இந்த விவகாரத்தில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் நாயர் யார்? அவருக்கும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கும் இடையே என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்புள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட வேண்டிய ரூ.144 கோடி நிதி மதுபான மாஃபியாவிற்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ஆம் ஆத்மி அரசு மீது பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷவாத் பூனேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.