முக்கியச் செய்திகள் சினிமா

சூர்யா-சிறுத்தை சிவா இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்திலும் இயக்குனர் பாலா படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படி இருக்க சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றிய தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது. அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில் சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 21) சூரியா -சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்றது.இப்படத்தை யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை “திஷா பதானி” நடிக்க இருக்கிறார். இசையமைப்பாள ”தேவி ஸ்ரீ பிரசாத்” இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தின் படவடிப்பு விரைவில் ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர் விபத்து; குடியரசுத் தலைவர் இரங்கல்

Arivazhagan Chinnasamy

திருமண வீட்டில் எதிர்பாராத சோகம்: 14 பேர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

உலகிலேயே அதிகமான பழுதடைந்த விமானங்கள் எங்கு உள்ளது தெரியுமா?

Jeba Arul Robinson