நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நமது சட்டப்போராட்டம் தொடரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். இதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். 2020-ல் 57.44% ஆகவும், 2021-ல் 54.40% ஆகவும் இருந்த தேர்ச்சி விகிதம் நடப்பு 2022-ல் 51.30% ஆக சரிந்துள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது தமிழ்நாடு. இதிலும் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வை எழுதியவர்களில் 80% அதிகமானோர் தேர்வில் தோல்யுற்றனர்.
இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அரசு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறது எனவும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது எனவும் கூறினார். மேலும் Hi – Tech ஆய்வகங்கள் வாயிலாக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களுக்கு ஏதும் மன அழுத்தம் இருப்பின் 14417 என்ற எண்ணுக்கு அழைத்து உரிய ஆலோசனையைப் பெற வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நமது சட்டப்போராட்டம் தொடர்கிறது இதில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் ’பாரத் ஜோடோ’ நடை பயணம் நேற்று மாலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி சிலைக்கு முன்பிருந்து தொடங்கியது. இன்று விவேகானந்தர் கல்லூரியில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார். இந்த நடை பயணத்தில் நீட் தேர்வினால் மரணமடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.