முக்கியச் செய்திகள் இந்தியா

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ், மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

கோவாவில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக, தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக அந்தக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, கோவாவில் சுற்றுப் பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் கோவாவில் அவர் முன்னிலையில், பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் அந்தக் கட்சியில் இன்று இணைந்தார். இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் விடியலை, இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவரும் காண்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது.புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பானாஜியில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கம் பலமான மாநிலம். அதை போல கோவா மாநிலத்தையும் வலுவான மாநிலமாக எதிர்காலத்தில் பார்க்க விரும்புகிறேன். கோவாவில் புதிய விடியலை காண விரும்புகிறோம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜி, கோவா-விற்கு ஏன் வருகிறார்? அங்கிருந்துகொண்டு இங்கு எப்படி செயல்பட முடியும்? என்று கேள்வி கேட்கிறார்கள். ஏன் வரக் கூடாது? நான் இந்தியாவைச் சேர்ந்தவள். இந்தியாவில் நான் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்களும் அப்படியே. நான் மதச்சார்பின்மை யை நம்புகிறேன். ஒற்றுமையை நம்புகிறேன். இந்தியா என் தாய்நாடு என்று நம்புகிறேன். மேற்கு வங்கம் என் தாயகம் என்றால் கோவாவும் எனக்கு தாயகம்தான் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

டவ் தே புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு!

Halley karthi

சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!

Ezhilarasan

தடுப்பூசி என்றால் பக்க விளைவுகள் இருக்கும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

Saravana