ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள்…

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு  பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது..

” சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் சர்வதேச நிதி அமைப்புகளின் நம்பகமான நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது. இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தி அளிக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அளிக்கும் தகவல் “ ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.