முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன்! தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது போலீஸ்!

கன்னியாகுமரி அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் ரஞ்சித் என்பவரும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் முகநூல் மூலம் பழகி காதலித்து…

கன்னியாகுமரி அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் ரஞ்சித் என்பவரும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் முகநூல் மூலம் பழகி காதலித்து வந்தனர். பிரவின் மதுவிற்கு அடிமையான நிலையில், அவருடனான காதலை இளம்பெண் முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பிரவின் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிரவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.