முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் லெஜண்ட் சரவணன் இடம் பிடித்துள்ளதாகப் பிரபல முன்னணி சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். இந்தப் படத்துக்குப் பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரபு, நாசர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மோசலோ மோசலு என்ற பாடல் ஏற்கனவே யூ-டியூப் தளத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் பாடலை பா.விஜய் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலான, வாடி வாசல் பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது. அந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டு’
சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்துத் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
https://twitter.com/onlynikil/status/1550071736854425600?s=21&t=VINtlKVAhZUvVSPctece7A
இந்த தகவலை, பிரபல முன்னணி சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில் லெஜண்ட் சரவணன் இடம் பிடித்துள்ளதாகவும், ஜூலை 28-ல், 5 மொழிகளில் 2500+ திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.








