GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.13,860-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.