ரேஷன் அரிசி வழங்கும் ஆலைகளில் நவீன கருவி பொருத்த முடிவு: அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குட்பட்ட 21 அரிசி ஆலைகளிலும் நவீன கருவியை பொருத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள…

ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குட்பட்ட 21 அரிசி ஆலைகளிலும் நவீன கருவியை பொருத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தரமான அரிசி வழங்கப்படுவதை அறிந்த அமைச்சர் சக்கரபாணி, அந்த ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமானதாக உள்ளதாக தெரிவித்தார். எனவே, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உட்பட்ட 21 ஆலைகளில், முதலமைச்சரின் ஆணையை பெற்று ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற நவீன கருவி பொருத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் தரமான அரிசியை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.