ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் அதிபர் ஜோ பைடனின் முடிவு தவறானது என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் விமர்சித்துள்ளார்.  கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் அதிபர் ஜோ பைடனின் முடிவு தவறானது என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் விமர்சித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள்,  அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார்.  அதாவது இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறும், செப்டம்பர் 11ம் தேதிக்கு முன்னதாக, ராணுவ துருப்புகள் திரும்பப்பெறப்படும் என அறிவித்திருந்தார். அமெரிக்கா மட்டுமல்லாது மற்ற நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது ராணுவ துருப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்டன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தாலிபான்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைகள் திரும்பப்பெறும் ஜோ பைடனின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இந்த முடிவின் காரணமாக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 43வது அதிபரான ஜார்ஜ் புஷ் தான், ஆப்கானிஸ்தா ராணுவ துருப்புகளை அனுப்பி வைத்தவர் ஆவார். தற்போது ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு பெண்கள், குழந்தைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவதாக வருத்தம் தெரிவித்தார்.

ஜோ பைடனின் இந்த முடிவு தாலிபான்களை ஆதிக்கத்தை அதிகரிக்கும் விதமாக உள்ளதாக விமர்சித்த ஜார்ஜ் புஷ், இது மிகவும் தவறான நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.