தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரேட்டரி கிளப் முலம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள், வாகனங்கள் பற்றிய 3 நாள் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கவும்: சூர்யா 42 படத்தில் நடிக்க ஆசையா! விவரம் இதோ…
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சாகு, பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2.8 கோடி மரங்கள் தமிழ்நாடு முழுவதும் நடப்பட்டன. மாவட்டங்களில் 350 நர்சரி அமைத்து மரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 100 ஈர நிலங்களை தேர்வு செய்து அவற்றை பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்டமாக 13 இடங்களுக்கு ஒப்புதல் பெற்று ராம்சார் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்க திட்டங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உள்ளது. பிளாஸ்டிக் தவிர்ப்பதற்காக மஞ்சப்பை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மஞ்சள் பை அதிகரிக்க அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சப்பை தயாரிக்கும் இயந்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு அந்தந்த பகுதி, பஞ்சாயத்து தலைவர்களின் உதவியுடன் விழிப்புணர்வு செய்யப்படுகிறது என அவர் கூறினார்.







