மொழி, உடை, உணவு என நமது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உப்பு சத்தியாகிரகத்தை நினைவுக்கூரும் விதமாக, நினைவு பாத யாத்திரையை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவன், தமிழ்நாட்டின் பண்பாட்டை பேணி காப்பவர்களுக்கு ஜால்ரா மட்டுமல்ல, மிருதங்கம் கூட வாசிப்பேன் என்று தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், நாட்டில் மக்களின் உரிமைகள் மீறப்படுவதுடன், மொழி, உடை, உணவு, பேச்சு, எழுத்து என அனைத்திலும் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதாக தெரிவித்தார். சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மக்கள் வளர்த்த போராட்ட உணர்வை மீண்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








