‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மீன்வளம் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உலக வங்கியின்…

மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மீன்வளம் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 15 மாவட்டங்களில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கால்நடை பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது’ – கே.பாலகிருஷ்ணன்

மேலும், பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பாரம்பரிய படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகுகள் வாங்கிட 300 மீனவர்களுக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிகள் போல, மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.