நிலவின் வெப்பநிலையை ஆராயும் லேண்டர்- புதிய அப்டேட்டை வெளியிட்ட இஸ்ரோ

விக்ரம் லேண்டரில்  இடம்பெற்றுள்ள கருவிகளின் சமீபத்திய தகவல்கள் குறித்த புதிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ந்…

விக்ரம் லேண்டரில்  இடம்பெற்றுள்ள கருவிகளின் சமீபத்திய தகவல்கள் குறித்த புதிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலகின் பல நாட்டுத் தலைவர்கள் முதல் பிரபலங்கள் என பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 தொடர்பான ஒவ்வொரு புதிய அப்டேட்களையும் இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. லேண்டரில் இருந்து ரோவர் 8 மீட்டர் பயணித்ததாக இஸ்ரோ அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நிலவில் நகர்ந்து சென்று ரோவர் ஆய்வு செய்யும் வீடியோவை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களைத் தேடுவதற்காக ரோவர் இறங்கிய  முனையைச் சுற்றித் திரிகிறது” என்ற அப்டேட்டுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது ரோவரின் செயல்பாடுகள் குறித்த புதிய தகவல்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவி அனுப்பிய முதல்நிலை தகவல்கள் குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ளது ; ChaSTE கருவியானது நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுதலை அளவிடும் தன்மை கொண்டது. விக்ரம் லேண்டரில் உள்ள சென்சார் கருவிகள் நிலவின் மேற்பரப்பில் 10 செ.மீ ஆழம் வரை வெப்ப நிலையை ஆய்வு செய்கின்றன” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

https://twitter.com/isro/status/1695725102166671448

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.