மதுரை விமான நிலையத்திற்கு இடம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு – அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்

மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும்…

மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம்
முடிவடைந்துள்ளது என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே சாத்தூர் ராமச்சந்திரன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை விமான நிலையம் நிலங்கள் கையவுப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. 186.31 ஹெக்டார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன மீதமுள்ள நிலங்களும் விரைவாக கையகப்படுத்தப்படும் என கூறினர்.

அத்துடன், எதிர்க்கட்சிகளுக்கு பயப்படும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை
கரும்பு மக்களுக்காகவே கொடுக்கப்பட உள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான் கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார். 
மேலும், எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்பத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தால் இந்த ஆட்சியை நடத்த முடியாது. எதிர்கட்களுக்கு பயப்படும் முதலமைச்சர் நம் முதலமைச்சர் இல்லை என தெரிவித்தார்.

அத்துடன், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஊர் மட்டும் பிரச்சினையாக உள்ளது.அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அங்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்று மடங்கு கூடுதலாக பணம் வழங்க
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஓரிரு
நாட்களில் நடைபெறும் பணி அல்ல அவர்களிடம் பேரம் பேசிய அவர்களை
திருப்திப்படுத்தி அதன் பிறகு தான் நிலங்களை கையகப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அவசர அவசரமாக நில எடுப்பு பணிகளை இந்த அரசாங்கம் செய்யவில்லை. 100% கட்டாயம் பரந்தூர் விமான நிலையம் வரும் சென்னையின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமாக உள்ளது. மாநில வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்பதை முதல்வர் உணர்ந்துள்ள அதற்கான பணிகளை முதல்வரும் அமைச்சர் எ.வ.வேலுவும் செய்து வருகின்றனர்.

இரண்டு துறைகள் சேர்ந்துதான் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் மதுரை விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எந்த பிரச்சினையிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கக் கூடிய நிலைமை இல்லை. கிராமத்தில்
சுடுகாட்டுக்கு ரோடு போடுவது என்றால் கூட பிரச்சினை உள்ளது எந்த பிரச்சினையாக
இருந்தாலும் மக்களோடு கலந்து பேசி அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.