முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

’பழங்கால தமிழை கதைக்கு ஏற்றவாறு சன்னி லியோனே பேசினார்’ – தர்ஷா குப்தா புகழாரம்

பழங்கால தமிழை கதைக்கு ஏற்றவாறு சன்னி லியோன் டப்பிங் பேசி உள்ளதாக தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘ஓ மை கோஸ்ட்’
திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை தர்ஷா குப்தா, நடிகர்கள் சதீஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் படக்குழு இன்று கண்டு களித்தது‌. படத்தை பார்த்து முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை தர்ஷா குப்தா, “இந்தியா முழுவதும் இன்று 5 மொழிகளில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படமான ‘ருத்ர தாண்டவம்’ கடந்த ஆண்டு வெளிவந்தது.

அதேபோன்று இந்த ஆண்டு முடிவதற்குள் ஏதேனும் ஒரு படம் வெளிவர வேண்டும் என நினைத்தேன். அதன்படி ஆண்டு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இன்று ‘ஓ மை கோஸ்ட்’ திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் முழுவதும் நடித்திருக்கிறேன். ஒரு சில இடங்களில் தான் என்னுடைய பங்கு இல்லாமல் இருக்கிறது. சன்னி லியோனுடன் ஒரு பாடலில் சிறிதாக நடித்துள்ளேன்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றவாற்று அவர் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தில் வரக்கூடிய வசனங்கள் அனைத்தும் பழங்காலத்தில் இருக்கக்கூடிய தமிழ் போன்று இருந்தது. அதை நானே பேசுவேன் என்று சொல்லி சன்னி லியோன் பேசி இருந்தார். சண்டை காட்சிகளிலும் அவர் நன்றாக நடித்துள்ளார். என்னுடைய சமூக வலைதள பதிவுகளுக்கு 1,000 நல்ல விமர்சனங்கள் வரும். அதே சமயம் 100 செய்திகள் தவறாகவும் இருக்கும். இருப்பினும் அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண் என்பதற்காகவே கொல்லப்படும் ஸ்ரத்தாக்கள்

Sugitha KS

திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Vandhana

”எச்.ஐ.வி உள்ளோரை அன்பால் அரவணைத்திடுவோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D