செய்திகள்

சொந்தமாக சமூக வலைதளம் தொடங்கிய ட்ரம்ப்

Truth Social என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்றை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். 

அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கத்தின் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால், அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. தனது கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தற்போதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ட்ரம்ப் தனியாக Truth Social என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். இதன் பீட்டா பதிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ட்விட்டரில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகில் நாம் வாழ்கிறோம். இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு அதிபர் ஜோ பைடன் ஏதும் செய்யாமல் இருக்கிறார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

Gayathri Venkatesan

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!

Saravana

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு

Gayathri Venkatesan