தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டன.
உலகில் உள்ள 7,000 சிறுத்தைகளில் பெரும்பாலானவை தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் வாழ்கின்றன. நமீபியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தைகளை மீண்டும் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டது. இந்த சிறுத்தைகளை கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாளன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மோடி விடுவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுத்தைகளை இந்தியா கொண்டு வருவதற்கு இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி இன்று மேலும் 12 சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்காவில் கொண்டுவரப்பட்டன. இந்த 12 சிறுத்தைகளும் இந்திய விமானப் படை விமானமான சி-17 என்ற விமானத்தில் இந்தியா வந்தடைந்தது.
அண்மைச் செய்தி:கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரஸூக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
இந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபெந்திர யாதவ் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மத்திய அமைச்சர் பூபெந்திர யாத் கூறுகையில், “கடந்த டிசம்பர் மாதம் சிறுத்தைகளை கொண்டுவரும் திட்டத்தை தொடங்கினார். தற்போது சிறுத்தைகளை கொண்டுவரும் இரண்டாம் கட்ட திட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கிடையே நமீபியாவில் சிறுத்தைகள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்துள்ளது” என்று தெரிவித்தார்.