பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டு சந்தை! – குந்தாரப்பள்ளியில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனையான ஆடு!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில்,  விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு ஆடு ரூ.1 லட்சத்திற்கு விற்பனையானது.  இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இந்த நாளில்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில்,  விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு ஆடு ரூ.1 லட்சத்திற்கு விற்பனையானது. 

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இந்த நாளில் ஆட்டு இறைச்சி வழங்கியும்,  பிரியாணி வழங்கியும் இஸ்லாமியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.  அந்த வகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில்,  வரும் 17ம் தேதி கொண்டாடபட உள்ள பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டு சந்தை நடந்தது.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  கேரளா,  கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதில் சேலம்,  தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் கொண்டு வரப்பட்டு இன்று விற்பனையாகின.  இன்று வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் இன்று கொச்சின் கொண்டு வரப்படுகிறது – தனித்தனி வாகனங்களில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டம்!

குறிப்பாக, குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் சவுத் ஆப்பிரிக்கன் போயர் இன ஆடு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.  ஆறு மாதமே ஆன இந்த ஆட்டு குட்டியின் ரூ.85,000 க்கு விற்பனையானது.  மேலும்,  இன்று ஒரே நாளில் மட்டும் சுமார்ரூ. 8 கோடி வரை ஆடுகள் விற்பனையாகியுள்ளது.  இதே போல் ஒரு ஆடு ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.