குண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு

மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவை சேர்ந்த மல்லிகா என்பவரின் மூத்த மகன் ஜெகதீசன்,…

மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவை சேர்ந்த மல்லிகா என்பவரின் மூத்த மகன் ஜெகதீசன், சென்னையில் ஐஐடியில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியை விட்டு விட்டு மதுரைக்கு வந்தவர் தாயுடன் தங்கி இருந்துள்ளார். சிவபக்தரான ஜெகதீசன், நாள்தோறும் தவம் செய்வதாகக் கூறி பல்வேறு யோகாசனங்களை செய்துவந்துள்ளார்.

கடந்த 22-ஆம் தேதியன்று குண்டலினி யோகா செய்ய போவதாகவும், 3 நாட்களுக்கு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், தமது தங்கை மற்றும் தாயிடம் கூறிய ஜெகதீசன், வீட்டின் அறையை பூட்டியபடி குண்டலினி யோகா செய்ய தொடங்கியுள்ளார்.

ருகட்டத்தில் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கதவை திறந்து பார்த்த போது உடல் அழுகி நிலையில் ஜெகதீசன் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெகதீசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஜெகதீசனின் தாய் மல்லிகா மற்றும் தங்கை ஆகியோரும் சிவபக்தர்கள் என்பதும், அவர்களும் தினமும் பக்தியுடன் யோகா செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. ஜெகதீசன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.