குடும்ப பிரச்சனை ஏற்பட்டால் முடிந்தவரை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை அழைத்தா கும்மியடுத்து கதையை முடித்துவிடுவார்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார் விஜய் ஆண்டனி. பின் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் இவர் வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்து வருகிறர்.
குறிப்பாக சலீம், பிச்சைக்காரன் என இவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேர்ப்பைப் பெற்றன. இதன் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம்வரத் தொடங்கினார். இந்நிலையில் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள ரத்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
பல்வேறு பேட்டிகளில் இவரது பேச்சு அவ்வப்போது வைரலாகும். இவர் பேசும் வாழ்க்கை தத்துவங்கள் பலரால் பகிரப்பட்டு வருவது வழக்கமே. அதேபோல் பிரபல சமூக வலைத்தள பக்கங்களுள் ஒன்றான ட்விட்டரிலும் விஜய் ஆண்டனி அவ்வப்போது பல பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்குப் பலரும் விஜய் ஆண்டனிக்கு என்ன பிரச்சனை யாரால் பிரச்சனை என்ற கேள்விகளோடு தங்கலது கருத்துகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த பதிவில் வரும் வாக்கியங்கள் இவரின் அடுத்த படத்தில் இடம்பெறும் வசனமாகவும் இருக்கக்கூடும் எனவும் கூறிவருகின்றனர்.








