வில்வித்தை தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற கும்கும் அனில் – பிரதமர் மோடி வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை கும்கும் அனில் மொஹோத்திற்கு பிரதமர் நரேந்திர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வில்வித்தை வீராங்கனை கும்கும் அனில் மொஹோத்தின் இந்த சாதனையை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“என்றும் நினைவில் நிற்கும் ஒரு தங்கப் பதக்கம் ! ஆசிய விளையாட்டு போட்டிகளில் ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற கும்கும் அனில் மொஹோத்திற்கு வாழ்த்துகள். பரபரப்பான ஷூட்-ஆப் சுற்றில் அவரது நிதானம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.