கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கிடங்கை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் அருகே எலுமிச்சங்காய் பாளையம்
என்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி
இருப்பதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் .
அங்கு பிரவீன் குமார் என்பவருக்குச் சொந்தமான கிடங்கினை ஆய்வு செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 டன் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் கிடங்கிற்கு சீல்
வைத்தனர்.
அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்
எனக் கூறப்படுகிறது. மேலும், கிடங்கின் உரிமையாளர் பிரவீன் குமாருக்கு 3 லட்ச
ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தாராசுரம் அருகே தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: