முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இது பொன்விழா அல்ல பெண் விழா..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்காக அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கும் கவாத்து, இசை வாத்தியம் கொண்டு அணிவகுப்பு மரியாதை முதல்வருக்கு வழங்கப்பட்டது. பெண் காவலர்களின் அந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பெண் காவலர்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட சிறப்பு வீடியோவையும் பார்வையிட்டார். அந்த வீடியோவில் பெண் காவலர்கள் இரவு பகல் பாராமலும் ஆண் காவலர்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரியும் காட்சிகள் இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, பெண் சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை கையாலும் சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. மூன்று விதமான துப்பாக்கிகளை கண்களை கட்டிக் கொண்டு லாவகமாக கையாளுதலை நான்கு நிமிடத்தில் செய்து காட்டினர். பெண்கள் காவலர்களின் பேண்ட் இசை இசைத்தாவாறு நடனமாட, கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் கரவொலி எழுப்பி, அந்த பெண் காவலர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனையும் படியுங்கள்: இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்; அதிர்ச்சியில் மக்கள்

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு, பிறகு ரூபாய் 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவளுக்காக அவள் என்ற பாடல் காட்சிபடுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 700 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஆண்கள் பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். அதனை நிரூபிக்குவகையில் தான் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. பெண்களும் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என அண்ணா கூறினார். பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை வேண்டும் என்று கருணாநிதி வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இப்படி பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை எங்களது அரசு செய்துள்ளது. பெண்கள் காவலர்களாக வர வேண்டும் என்பதை செயலாக்கியவர் கருணாநிதி. ‘1973 ஆம் ஆண்டு தான் தமிழ்நாடு காவல் படையில் பெண்கள் இணைக்கப்பட்டனர். முதன்முதலாக பெண்களை காவலராக உருவாக்கி அவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்தவர் கருணாநிதி. எனது பாதுகாப்புக்காக பெண் காவலர்களை நிற்கவைக்க வேண்டாம் என உத்தரவிட்டேன். காவலர்களின் வீர செயல்களை பார்த்து வியந்தேன். தமிழக காவல் துறையில் அனைத்து நிலைகளிலும், 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும். பெண் காவலர்கள் காவல் பணியோடு, குடும்பப் பணியையும் சேர்த்து பார்த்து வருகின்றனர். ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது பொன்விழா அல்ல பெண் விழா என கூறி பெருமிதம் கொண்டதோடு, அவர்களுக்கான 9 சிறப்பு திட்டங்களையும் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உள்ளிட்டோர் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: எல்.முருகன் சொல்லும் காரணம்!

EZHILARASAN D

மாலத்தீவுக்குச் செல்வதற்குத் தடை: மனமுடைந்த பாலிவுட் நடிகர்கள்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Halley Karthik

மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த தில்லையாடி வள்ளியம்மை!

G SaravanaKumar