குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூர் வரை செல்லும் சாலை பழுதடைந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுவதால் சாலையை சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூருக்கு வரை கரையோரமாக செல்லும் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் பொழுது பல்வேறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே அதை சீரமைத்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாலை சீரமைப்பு தொடர்பாக பத்து ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இனுங்கூர் முதல் நச்சலூருக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கும் பொழுது அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கரையோரமாக
சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக எம்.எல்.ஏ, எம்.பி நிதியில் போடப்பட்ட இந்த சாலை பல கற்கள் முழுவதும் பேர்த்துக்கொண்டு அதிக அளவு பள்ளங்களாக உள்ளது. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தர அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்








