சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய போது முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த் அவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாடு அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




