நெல்லை, கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேரோட்ட திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நெல்லை, கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேரோட்ட திருவிழா, ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று காலை திருயாத்திரை திருப்பலியும், மாலை செபஸ்தியார் சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து, கொடியை கூடங்குளம் பங்கு தந்தை அர்ச்சித்து கொடியை ஏற்றி வைத்துதார்.
இதனைத் தொடர்ந்து மறையுறையுடன் கூடிய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
கொடியேற்று விழாவில், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் காலையில் திருயாத்திரை
திருப்பலியும், மாலை ஜெபமாலை, மன்றாட்டு மாலை, மறையுரை நற்கருணை
ஆசீர், இரவில் கிறிஸ்தவ கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும், வரும்
15ம் தேதி சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெறும்.
கு. பாலமுருகன்







