தனுஷின் ‘குபேரா’ டிரெய்லர் வெளியீடு!

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் குபேரா. இப்படத்தின் மூலம் தெலுங்கு பிரபல நடிகர் நாகார்ஜுனா முதல்முறையாக தனுஷுடம் இணைந்து நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி பட பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.