இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 74. நெல்லையைச் சேர்ந்த சு. முத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து, மதுரையில் உள்ள அவரது மகள் டாக்டர் கலைவாணி இல்லத்துக்கு நெல்லை முத்து உடல் கொண்டு வரப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








