முக்கியச் செய்திகள் தமிழகம்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத நிலை காணப்பட்டது. அத்துடன், கட்சிப் பணிகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார். சமூக ஊடகங்களில் கட்சியின் செயல்பாடு குறித்த விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைத்து வந்தார்.

விடுதலைப் புலிகளோடு நெருங்கிப் பழகிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன், டெசோ அமைப்பில் முக்கிய பங்காற்றியவர். களப்பணியாளர்களை திமுக தலைவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நீயே உனக்கு என்றும் நிகரானவன்”

Web Editor

டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

G SaravanaKumar

காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு; யாருக்கு வாய்ப்பு?

EZHILARASAN D