கால்பந்து விளையாட்டின் போது தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்-பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

கேரளா மாநிலம் இடுக்கியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்த 14 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் இடுக்கி தொடுபுழா இடைவெட்டி…

கேரளா மாநிலம் இடுக்கியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்த 14 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

கேரளா மாநிலம் இடுக்கி தொடுபுழா இடைவெட்டி பகுதியை சேர்ந்த 14வயது சிறுவன் ஹாபீப்.இவன் தனது நண்பர்களுடன் நேற்று வீட்டின் அருகிலுள்ள இடத்தில் கால்பந்து விளையாடினார்.இவர் விளையாடிய இடத்தின் அருகே வீட்டு உபயோகத்திற்கான கினறு ஒன்று உள்ளது.

கால்பந்து விளையாட்டின் போது ஹாபீன் கிணற்றின் அருகே நின்றுள்ளார்.
அப்போது அவனது நண்பன் கால்பந்தை உதைதுள்ளான்.அப்பந்து ஹாபீப் தலைக்கு மேல் சென்றுள்ளது அதை தடுக்க முயன்ற ஹாபீப் துள்ளி குதித்த பொழுது நிலை தடுமாறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனால் கூச்சலிட்ட அவனது நண்பர்களின்  சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 10 அடிக்கும் மேல் நீர் இருந்த கிணற்றுக்குள் தத்தளித்த சிறுவனுக்கு அருகிலிருந்த ஏணியை கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினர்.

பின்னர் அதை இறுக பற்றிக் கொண்ட சிறுவன் தண்ணீரில் தத்தளித்தான்.பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கிணற்றில் இறங்கி வலை மூலம் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.