முக்கியச் செய்திகள் இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி விழா; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணரின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ண அவதாரம். இதையொட்டி நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் ஒன்றாகும். கிருஷ்ண ஜெயந்தி நாளன்று மக்கள் வீடுகளில் குழந்தைகளின் பாதம் பதிந்து கிருஷ்ணரை வரவேற்பதோடு, வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து மகிழ்வர். மாலையில் கிருஷ்ணரின் விருப்ப உணவுகளை படைத்து கிருஷ்ணனை வழிபடுவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை லீலையிலிருந்து, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களைச் செய்யும் கல்வியைப் பெறுகிறோம். எண்ணம், சொல், செயலால் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்க இந்தப் புனிதப் பெருவிழா நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram