கோயம்பேட்டில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: வியாபாரிகள் சங்கம்!

தினமும் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை  கடை திறக்க அனுமதிக்க வேண்டுமென சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு…

தினமும் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை  கடை திறக்க அனுமதிக்க வேண்டுமென சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால், கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்தது.

 இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று முதல் சுழற்சி முறையில் 50 சதவீதம் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தினர்  சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்கத்தின் துணைத் தலைவர் வெங்கட்ராமன்,  50 சதவீத கடைகளைத் திறக்கும் அனுமதியை மாற்றி 100 சதவீத அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். கோயம்பேடு சில்லறை வணிக கடைகளால் தினந்தோறும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவதாக தெரிவித்த அவர்,  அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவோம் என்றும் தினமும் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை  கடை திறக்க அனுமதிக்க கோரியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.