கோவையில் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் வங்கி அளித்த மன உளைச்சல் காரணமாக விவசாயி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் ஹோம்லோன் நிறுவனத்தில் வங்கி கடன் பெற்றுள்ளார். கொரோனோ காரணமாக கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடனை திருப்பி தரக்கோரி வங்கி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக அந்த விவசாயி கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், “வங்கியிடம் இருக்கும் தனது வீட்டு பத்திரத்தை மீட்டு குடும்பத்தினரிடம் கொடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்வதாக” மரண வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் விரைந்து உடலை கைப்பற்றி உடற்கூற் ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி உயிரை மாய்த்துக் சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திவுள்ளது.