சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ‘கொட்டுக்காளி’ திரைப்படம்!

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை…

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்காக கொட்டுக்காளி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.

கொட்டுக்காளி திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளதை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1735291175899406632

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.