முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!

சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த விவசாய கூட்டமைப்பினர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன்…

சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த விவசாய கூட்டமைப்பினர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில், கொங்கு மண்டல விவசாய கூட்டமைப்பினர் சந்தித்தனர்.

அப்போது, விவசாயிகளுக்காக முதலமைச்சர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

அப்போது, பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தாமும் விவசாயி என்ற காரணத்தால், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.