முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் : ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்தது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு பெரும்பாலும் தகுதி பெற்றுவிட்டது.

ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச் சைத் தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்க டேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்த ஜோடி, பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது. பிறகு, அந்த அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இருவரும் ரன் ரேட்டை உயர்த்தினர். சுப்மன் கில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந் தார். கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 14 ரன்களுடனும் கேப்டன் மோர்கன் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ராகுல் திவாட்டியா, பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் லிவிங்ஸ்டன் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் களமிறங்கிய வீரர்கள் அடுத்த டுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா மட்டும் அதிகப்பட்சமாக 44 ரன்கள் எடுத்தார். இதனால், ராஜஸ்தான் அணி 16.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி யது.

கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளும், பெர்கு சன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு பெரும்பாலும் தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நடைபெறும் போட்டியில், ஐதராபாத் – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றால், மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி  பெறலாம். அவ்வாறு நடக்க வாய்ப்பில்லாததால், பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம் என்கிறார்கள்.

 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik

திராவிடர் கழகம் தலைமையில் 32 கட்சிகள் கலந்துக்கொண்ட அனைத்துக்கட்சி கூட்டம்

சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்

Ezhilarasan