முக்கியச் செய்திகள் தமிழகம்

குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நடத்தி வருகிறது. கடந்த 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து, 2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 ரூபாயை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1998ல் குத்தகை காலம் முடிந்த பிறகும் நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 08 லட்சம் ரூபாயையும், கோயிலுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்: முதலமைச்சர்

Ezhilarasan

மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்

Gayathri Venkatesan

காதலிக்க மறுத்த பெண்: ஆசிட் வீசி விடுவதாக மிரட்டும் இளைஞர்!

Jayapriya