போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப் பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கைதானவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜா்படுத்தினர். ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.