கோடநாடு கொலை வழக்கு : கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியில் கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை வழக்கு சம்மந்தமாக கோவை சிறப்பு சிபிசிஐடி டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள…

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியில் கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை வழக்கு சம்மந்தமாக கோவை சிறப்பு சிபிசிஐடி டிஎஸ்பி சந்திரசேகர்
தலைமையிலான போலீசார் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர்
கிராமத்தில் வசிக்கும் கனகராஜியின் பெரியம்மா பாவாய் வீட்டில் ஏதேனும்
ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்துவிட்டு எதுவும் கிடைக்காததால் திரும்பி
சென்றனர்.

அண்மைச் செய்தி : அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

தொடர்ந்து கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக அடுத்தடுத்து கனகராஜியின்
உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பணிக்கனூர் கிராம பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.