வாக்குப்பதிவு முன்னிட்டு கொடைக்கானில் அரசு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன!

வாக்குப்பதிவு பொது விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானில் உள்ள அரசு சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வசதியாக இன்று…

வாக்குப்பதிவு பொது விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானில் உள்ள அரசு சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வசதியாக இன்று பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


இதையடுத்து கொடைக்கானலில் உள்ள அரசு சுற்றுலா தலங்களில் பணியாற்றும் வனத்துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஒரு நாள் மட்டும் கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை , பைன்மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களும் இன்று மூடப்படும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.